உள்ளூர் செய்திகள்

விளைச்சல் பாதிப்பால் - முருங்கைக்காய்களுக்கு தட்டுப்பாடு

Published On 2022-12-15 06:58 GMT   |   Update On 2022-12-15 06:58 GMT
  • வெயில் அதிகம் இல்லாததால் பூச்சி தாக்குதல் அதிகரித்தது.
  • நல்ல விலை கிடைத்த போதிலும் விளைச்சல் இல்லாததால் பயனடைய முடியவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

திருப்பூர் :

கடந்த ஆடி மாதத்தில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் முருங்கை மரத்தில் இருந்த பெரும்பாலான பூக்கள் உதிர்ந்து விட்டன. வெயில் அதிகம் இல்லாததால் பூச்சி தாக்குதல் அதிகரித்தது. அவை இலை, கொழுந்து, பூக்கள் என அனைத்தையும் சாப்பிட்டு விட்டன.

மருந்துகளை தெளித்தும் பூச்சிகளை கட்டுப்படுத்த இயலவில்லை. மரங்கள் வறண்டு போனது போல மாறிவிட்டது. கணிசமான விவசாயிகள் அவற்றை முற்றிலும் வெட்டி அகற்றி விட்டனர். சபரிமலை சீசன் என்பதால் பலரும் சைவ உணவுக்கு மாறிவிட்டனர். கார்த்திகை மாதத்தில் முகூர்த்தங்கள் அதிகம்.

இதனால் முருங்கைக்காய் பிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் விளைச்சல் முற்றிலும் பாதிக்கப்பட்டதால் முருங்கைக் காய்க்கு தட்டுப்பாடு நிலவுகிறது. உள்ளூர் விளைச்சல் முற்றிலும் நின்று விட்டது. நல்ல விலை கிடைத்த போதிலும் விளைச்சல் இல்லாததால் பயனடைய முடியவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

Tags:    

Similar News