உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் அர்ஜுன் சம்பத் பேசிய காட்சி.

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது - திருப்பூரில் அர்ஜுன் சம்பத் பேட்டி

Published On 2022-10-02 11:56 IST   |   Update On 2022-10-02 11:56:00 IST
  • திருமாவளவன், சீமான் ஆகியோரை கண்டித்தும், இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • பால் விலை, சொத்து வரி, மின் கட்டண உயர்வு என, விலைவாசி உயர்வில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.

திருப்பூர் :

தி.மு.க., - எம்.பி., ராஜாவின் அவதுாறு பேச்சை கண்டித்தும், தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசி வரும் திருமாவளவன், சீமான் ஆகியோரை கண்டித்தும், இந்து மக்கள் கட்சி சார்பில், திருப்பூர் குமரன் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்துக்கு பின் அர்ஜுன் சம்பத் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

பால் விலை, சொத்து வரி, மின் கட்டண உயர்வு என, விலைவாசி உயர்வில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் மூலம், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., - இந்து மக்கள் கட்சி மீது அவதுாறு பரப்புகின்றனர்.அவதுாறு பரப்புபவர்களை கைது செய்ய வேண்டும்.தி.மு.க., ஆட்சியில், பொங்கல் பரிசு வழங்கியதில் ஊழல் நடந்தது. அந்த நிறுவனங்களுக்கே மீண்டும் பொருட்கள் வாங்க உத்தரவிடுகின்றனர். விமர்சனங்களை தாங்கி கொள்ள முடியாத அரசு, குற்றச்சாட்டுகளை சுட்டி காட்டினால் திருத்தி கொள்ள தயாராக இல்லை. அடக்குமுறையை கையாள்கின்றனர்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Tags:    

Similar News