உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.
- 30 ஆயிரத்து 687 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
- ஏப்ரல் 6-ந் தேதி துவங்கி 20ந் தேதி வரை தேர்வு நடக்கிறது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 106 தேர்வு மையங்களில் 354 பள்ளிகளை சேர்ந்த 30 ஆயிரத்து 687 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். தனித்தேர்வர்களாக 1,484 பேர் இத்தேர்வை எதிர்கொள்கின்றனர். ஏப்ரல் 6-ந் தேதி துவங்கி 20ந்தேதி வரை தேர்வு நடக்கிறது.
கடந்த 22ந் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான (அறிவியல்) செய்முறைத்தேர்வு இன்று நிறைவு பெறுகிறது. இந்நிலையில் தேர்வுத்துறையின் இணையதளத்தில் www.dge.tn.gov.in ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர் ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்து மாணவர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.