உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்.
உடுமலையில் மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
- வன உரிமைச் சட்டம் 2006 ஐ தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத்தலைவர் எஸ் ஆர் மதுசூதனன் சிறப்புரை ஆற்றினார்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை வருவாய் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வன உரிமைச் சட்டம் 2006 ஐ தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், நிலுவையில் உள்ள மனுக்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில துணைச் செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத்தலைவர் எஸ் ஆர் மதுசூதனன் சிறப்புரை ஆற்றினார். மலைவாழ் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.