உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

தொழிலாளர் துறை சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம்

Published On 2023-07-13 16:05 IST   |   Update On 2023-07-13 16:05:00 IST
  • நுகர்வோர் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
  • புகார்களுக்கு துறை சார்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

திருப்பூர்:

தொழிலாளர் ஆணையாளர் அதுல் ஆனந்த் உத்தரவின்படி, திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுரையின்படி, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் தமிழரசி, இணை ஆணையாளர் லீலாவதி ஆகியோர் மேற்பார்வையின் திருப்பூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) ஜெயக்குமார் தலைமையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் துறை சார்பாக நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பல்வேறு நுகர்வோர் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. சட்ட முறை எடையளவு சட்டம் மற்றும் பொட்டலப்பொருட்கள் விதிகள் தொடர்பாக புகார் அளிப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நுகர்வோர் கூட்டமைப்பு பொறுப்பாளர்களிடம் எடுத்துக்கூறப்பட்டது.

பல்வேறு அமைப்புகள் சார்பில் அளிக்கப்பட்ட புகார்களுக்கு துறை சார்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் துறை சார்ந்த தொழிலாளர் ,துணை ஆய்வாளர்கள், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News