உள்ளூர் செய்திகள்

 பாராட்டு விழா நடைபெற்ற காட்சி.

தேசிய மூத்தோர் தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

Published On 2023-02-24 17:53 IST   |   Update On 2023-02-24 17:53:00 IST
  • தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
  • 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

காங்கயம் :

கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய மூத்தோர் தடகள போட்டியில் தமிழக அணியில் காங்கயம் ரன்னர்ஸ் சார்பாக 35 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா காங்கயம்-சென்னிமலை சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் தேசிய மூத்தோர் தடகள போட்டியில் தமிழக அணியில் காங்கயம் ரன்னர்ஸ் சார்பாக 35 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் 5000 மீட்டர் நடை போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற களிமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை பிரேமலதா மற்றும் வட்டு எறிதல் போட்டியில் தேசிய அளவில் வெண்கலம் வென்ற ஜோதி மற்றும் காங்கயம் ரன்னர்ஸ் சார்பாக கலந்து கொண்ட லதா மற்றும் ராஜ்குமார் ஆகியோரும் கவுரவிக்கப்பட்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. விழாவில் காங்கயம் ரன்னர்ஸ் அமைப்பை சேர்ந்த லதா மகேஷ்குமார் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இந்த விழாவில் ஓசூரில் நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News