உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

கலெக்டர் அலுவலக பணியாளர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

Published On 2023-04-13 10:22 GMT   |   Update On 2023-04-13 10:22 GMT
சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

திருப்பூர்:

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் சமத்துவநாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூகஅடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடையஉரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள்எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்பு சட்டத்தை வகுத்து தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தைஅமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களை சாதியின்பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம்சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன் என அனைத்துத்துறை அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது)விஜயராஜ், (நிலம்) துரை, தனிதுணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) அம்பாயிரநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் நலஅலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.  

Tags:    

Similar News