உள்ளூர் செய்திகள்

 குழந்தைகள் நலம் மற்றும் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றக் காட்சி.

வெள்ளகோவில் நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

Published On 2023-07-14 15:54 IST   |   Update On 2023-07-14 15:54:00 IST
  • 18 வயதிற்க்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • ஆதார் எண்ணை கட்டாயம் தொழிலாளர் நல அலுவலகத்தில் பதிவு செய்தல் வேண்டும்.

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் நலம் மற்றும் பாதுகாப்பு குழு கூட்டம் நகர்மன்ற தலைவர் மு.கனியரசி முத்துக்குமார் தலைமையில், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு ) எஸ்.வெங்கடேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்த கூடாது. 18 வயதிற்க்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு மையம் மூலம் தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும்.

மேலும் 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளை திருமணம் செய்து வைத்தல் கூடாது என குழந்தைகளின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தல் வேண்டும் எனவும் இது போன்ற செயலில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் பணியில் அமர்த்தும் நிறுவனம் மீது கள ஆய்வு மேற்கொண்டு தகுந்த ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

தனியார் நிறுவனங்களில் பணியாளர்களை வேலையில் சேர்க்கும் பொழுது அவர்களுடைய வயதை கண்டறிய ஆதார் எண்ணை கட்டாயம் தொழிலாளர் நல அலுவலகத்தில் பதிவு செய்தல் வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் நகர்மன்ற துணைத் தலைவர் விஜயலட்சுமி குமரவேல் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், வெள்ளகோவில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி, குழந்தைகள் நல குழு உறுப்பினர், பள்ளி ஆசிரியர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு பிரதிநிதி, தொழிலாளர் உதவி ஆய்வாளர், தன்னார்வுத் தொண்டு நிறுவனத்தினர், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News