கோப்பு படம்.
திருப்பூர் வழியாக இயக்கப்படும் ரெயில்களின் நேரத்தில் மாற்றம்
- 27 ரெயில்களில் புறப்படும் பயணிக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
- திருச்சி நிலைய அட்டவணையில் குறிப்பிட்ட நேரத்துக்கு (மாலை, 4:50 மணிக்கு) வந்து சேரும்.
திருப்பூர்:
திருச்சி மார்க்கத்தில் நடக்கும் பொறியியல் மேம்பாட்டு பணி காரணமாக 27 ெரயில்களில் புறப்படும் பயணிக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
வருகிற ஆகஸ்டு 13ந்தேதி இரவு 10 மணிக்கு சென்னையில் புறப்படும் ெரயில் சேரன் எக்ஸ்பிரஸ் (எண்:12673) காட்பாடி நிலையத்திற்கு இரவு 11:48 மணிக்கு வந்து 5 நிமிடம் தாமதமாக இரவு 11:53 மணிக்கு வரும். இந்த ெரயில் ஜோலார்பேட்டை நிலையத்திற்கு அதிகாலை 1:03க்கு பதிலாக 10 நிமிடம் தாமதமாக 1:13 மணிக்கு வந்து சேரும்.
ஆகஸ்டு 14ந்தேதி மயிலாடுதுறை - கோவை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் (எண்:12083) மதியம் 2:55 மணிக்கு பதில் 5 நிமிடம் தாமதமாக 3 மணிக்கு மயிலாடுதுறையில் புறப்படும். கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர் நிலையங்களுக்கு தாமதமாக வரும்.
ஆனால் திருச்சி நிலைய அட்டவணையில் குறிப்பிட்ட நேரத்துக்கு (மாலை, 4:50 மணிக்கு) வந்து சேரும். இந்த 2 ரெயில்கள் உட்பட 25 ெரயில்களின் புறப்படும், பயணிக்கும் நேரம் ஆகஸ்டு 2-வது மற்றும் 3-வது வாரம் குறிப்பிட்ட தேதியில் மாற்றப்பட்டுள்ளது. இத்தகவலை ரெயில் நிலையத்தில் உள்ள தகவல் மையத்தில் பயணிகள் அறியலாம் என சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.