உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்
வெள்ளகோவிலில் விவசாயி வீட்டில் பணம், மோட்டார் சைக்கிள் திருட்டு
- சுவற்றின் மேல் சாவியை வைத்துவிட்டு தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
- அலமாரியில் வைத்திருந்த பணம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் திருடியுள்ளனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகேயுள்ள வேலாயுதகவுண்டன்புதூர் குளுகாட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கிட்டுச்சாமி(வயது 70) ,விவசாயி. நேற்று காலை இவர் குடியிருக்கும் வீட்டை பூட்டி விட்டு அருகிலுள்ள சுவற்றின் மேல் சாவியை வைத்துவிட்டு தோட்டத்திற்கு சென்றுள்ளார். இவரது மனைவி லோகநாயகி(63) மகனுடன் வெளியூர் சென்று விட்டார்.
கிட்டுச்சாமி மதியம் தோட்டத்தில் இருந்து வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டில் உள்ளே அலமாரியில் வைத்திருந்த பணம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மற்றும் வீட்டின் முன் நிறுத்தி இருந்த இரு சக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தது. இது குறித்து வெள்ளகோவில் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.