உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து பொருட்களை மாணவிகள் பார்வையிட்ட காட்சி. 

தாய்ப்பால் குழந்தைகளின் அறிவுக்கூர்மையை அதிகப்படுத்தும் - விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அதிகாரி பேச்சு

Published On 2022-08-09 08:29 GMT   |   Update On 2022-08-09 11:58 GMT
  • தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் அதிக ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • நோய் எதிர்ப்புச் சக்தியையும், அறிவுக்கூர்மையையும் அதிகப்படுத்தும்.

திருப்பூர் :

தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக கல்லூரி வளாகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு‌ தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செளமியா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர்கள் பேசுகையில் , தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் அதிக ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ள வேண்டும். துரித உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் , ஒரு குழந்தை பிறந்த ஒருமணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு தாய்ப்பால் மூலமாக சிறந்த ஊட்டச்சத்து கிடைப்பதால் , நோய் எதிர்ப்புச் சக்தியையும், அறிவுக்கூர்மைையயும் அதிகப்படுத்தும்.

தாய்ப்பாலில் கண்பார்வைக்கு தேவையான வைட்டமின் -ஏ நிறைந்துள்ளது, தாய்ப்பாலில் உள்ள வெள்ளையணுக்கள் வயிற்றுப்போக்கு , மஞ்சள் காமாலை போன்ற நோய் தொற்றுக்களைத் தடுக்கிறது. தாய்ப்பால் குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாக கூடிய முதல் உணவு. குழந்தைகளுக்கு உடல் பருமனாக உதவும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். சுவாச நோய் தொற்றுக்களை தடுக்கும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் பருப்பு, பயறு, முளைகட்டிய தானியங்கள் மற்றும் பயறுகள், உலர்பழங்களைச் சாப்பிடலாம். மீன், முட்டை, கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி ஆகியவற்றைச் சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. தாய்மார்கள் பாதாம் பருப்பு, பேரீச்சம் பழம் தினமும் சாப்பிடலாம். தினமும் 3 லிட்டருக்குக் குறையாமல் பாதுகாக்கப்பட்ட சுத்தமான தண்ணீர் குடிக்க வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருக்க வேண்டும் . மன உளைச்சல் இருந்தால் பால் சுரப்பது குறைந்து விடும் என்றனர். நிகழ்ச்சியில் மாணவ செயலர்கள் சுந்தரம், அஜித், ஜீவானந்தம், சந்தியா, ரேஷ்மா தலைமையில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News