உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்
சிறுமிக்கு பாலியல் தொல்லை- போக்சோவில் வாலிபர் கைது
- யுவராஜ் கோழிப் பண்ணையில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.
- புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாக கூறி வாலிபர் ஒருவர் பாலியல் சீண்டல்கள் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி இது குறித்து அவரது பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்த போது சிறுமி க்கு பாலியல் தொல்லை கொடுத்தது பல்லடம் அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்த யுவராஜ் என்பது தெரிய வந்தது. இவர் அந்தப் பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.