உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

கோவை-சேலம் ரெயில் ரத்தால் பனியன் தொழிலாளர்கள் பாதிப்பு

Published On 2022-11-08 04:52 GMT   |   Update On 2022-11-08 04:52 GMT
  • கோவை - சேலம் பாசஞ்சர் ரெயில் கடந்த ஜூலை 11-ந் தேதி முதல் மீண்டும் இயங்கத் துவங்கியது.
  • கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டத்தை இணைக்கும் ஒரே பாசஞ்சர் ெரயில் இது தான்.

திருப்பூர் :

கொரோனா காரணமா 2½ ஆண்டாக நிறுத்தப்பட்டிருந்த, கோவை - சேலம் பாசஞ்சர் ரெயில் கடந்த ஜூலை 11-ந்தேதி முதல் மீண்டும் இயங்கத் துவங்கியது.2 நாள் மட்டுமே இயங்கிய நிலையில் காவேரி - ஆனங்கூர் இடையே பராமரிப்பு பணி நடந்ததால் ஜூலை 13 முதல் 24-ந்தேதி வரை 10 நாட்களுக்கு ரெயில் ரத்து செய்யப்பட்டது. ஆகஸ்டு -செப்டம்பர் மாதம் ெரயில் முழுமையாக இயங்கியது. கோவை - திருப்பூர் இடையே பொறியியல் மேம்பாட்டு பணி காரணமாக அக்டோபர் 13 முதல் 30-ந்தேதி வரை 17 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டது.

பணி முடிந்து அக்டோபர் 31 முதல் மீண்டும் இயங்கத் துவங்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காவேரி - ஈரோடு இடையே பொறியியல் மேம்பாட்டு பணி நடப்பதால் அக்டோபர் 31 முதல் நவம்பர் 29 வரை 30 நாட்களுக்கு முழுமையாக ெரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

இது குறித்து ெரயில் பயணிகள் கூறுகையில், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டத்தை இணைக்கும் ஒரே பாசஞ்சர் ெரயில் இது தான். ஞாயிற்றுக்கிழமை தவிர, வாரத்தின் 6 நாட்கள் இயங்குவதால், ஆயிரக்கணக்கான பயணிகள், பனியன் தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் மாதாந்திர சீசன் டிக்கெட் எடுத்து பயணித்து வந்தனர். பகுதி அளவிலாவது பாசஞ்சர் ெரயிலை இயக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News