உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்படும் வாழைபழங்கள் - தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

Published On 2023-03-23 07:40 GMT   |   Update On 2023-03-23 07:40 GMT
  • ஒரு பழத்தை ரூ. 5க்கு வாங்கிவிட முடியும்.
  • வாழைப்பழங்கள் சாப்பிட்ட பிறகு தொண்டையில் எரிச்சல், வயிறு கோளாறு போன்றவை ஏற்படுவதாக கூறப்படுகிறது.

திருப்பூர் :

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் பொதுமக்கள் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாகும். அனைத்து முக்கிய சுபநிக ழ்ச்சிகள், மருத்துவத்தில் வாழைப்பழத்துக்கு முக்கிய இடமுண்டு. பொதுவாக அனைத்து பழங்களுமே சத்து நிறைந்ததுதான். ஆனால் மற்றவற்றை விட இதன் விலையை ஒப்பிடும்போது மிக மிக குறைவு. ஒரு பழத்தை ரூ. 5க்கு வாங்கிவிட முடியும். மேலும் இதில் அதிக சத்துக்கள் அடங்கியுள்ளது. இது எல்லா காலங்களி லும், எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூ டியது. அதனாலேயே எல்லோரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். சில மாதங்களாக திருப்பூர் நகரில் விற்கப்படும் வாழைப்பழங்கள் அத்தனை ருசியாக இல்லை எனவும் வாழைப்பழங்கள் சாப்பிட்ட பிறகு தொண்டையில் எரிச்சல், வயிறு கோளாறு போன்றவை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:-

விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளைவிக்க ப்படும் வாழைத்தார்களை நகரத்தில் கொண்டு சென்று விற்க வேண்டும் என்பதற்காக பழுப்பதற்கு முன் 10நாளைக்கு முன்பே வெட்டி விடுகிறார்கள். அதனை விவசாயிகளி டமிருந்து வாங்கும் மொத்த வியாபாரிகள் தங்களது குடோனுக்கு கொண்டு சென்று இருப்பு வைக்கி ன்றனர். மேலும் விரைந்து பழுக்க வைக்க போபாலின் என்ற ரசாயனத்தை நீரில் கலந்து தெளித்து விடுகிறார்கள். தெளித்த சில மணி நேரங்களில் பழங்கள் பழுத்து விடுகின்றன. முதலில் இந்த முறையில் தான் மோரீஸ் பழங்களை பழுக்க வைத்துக் கொண்டிரு ந்தனர். தற்போது நாட்டு பழ வகைகளையும் பழுக்க வைக்கின்றனர். இப்படி பழுக்க வைப்பதால் மருத்துவ குணம் கெட்டுப்போ வதோடு அதன் தனித்தன்மை யையும் இழந்துவிடுகிறது. ரசாயனம் கலக்கப்படும் பழங்கள் 7 நாட்கள் வரை கெடாமல் இருக்கின்றன. பழமும் புதிது போலவே இருப்பதால் நாமும் எளிதில் ஏமாந்து விடுகிறோம்.

இந்த பழங்கள் நம்முடைய சருமத்தில் தடிப்புகள் மற்றும் அரிப்புகளை ஏற்படுத்துமே தவிர நன்மையை தராது. மேலும் வயிற்றுக்குள் செல்லும் இந்த ரசாயனம் வயிற்றுப்புண், சைனஸ், ஆஸ்துமா, செரிமான கோளாறு, சிறுநீரக கோ ளாறு போன்றவைகளையும் ஏற்படுத்தும். மார்க்கெட்கள், மற்றும் பழ குடோன்களில் உணவுத்துறை அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு இது போன்ற செயலில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News