உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

பேக்கரி உரிமையாளர் தற்கொலை

Published On 2023-08-05 16:34 IST   |   Update On 2023-08-05 16:34:00 IST
  • நேற்று முன்தினம் இரவு திருநங்கையின் வீட்டிற்கு அவர் வந்ததாக கூறப்படுகிறது.
  • வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்கு மாட்டி ஸ்ரீநாத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

பல்லடம்:

விருதுநகரைச் சேர்ந்த சந்தானராஜ் என்பவரது மகன் ஸ்ரீநாத்,(வயது 28). இவர் பல்லடத்தை அடுத்த மங்கலம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சத்யா நகர் பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். இந்த நிலையில் பல்லடம் காந்தி சாலையில் வசிக்கும் திருநங்கை ஒருவருடன் இவருக்கு கடந்த சில மாதங்களாக பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருநங்கையின் வீட்டிற்கு அவர் வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே கடைக்குச் சென்று வருவதாக கூறி திருநங்கை வெளியே சென்றதாக கூறப்படுகிறது. அவர் வெளியே சென்றவுடன் வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்கு மாட்டி ஸ்ரீநாத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அவரது தந்தை சந்தானராஜ் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற பல்லடம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News