உள்ளூர் செய்திகள்
விழிப்புணர்வு நடைபெற்றக் காட்சி.
வெள்ளகோவிலில் நலவாரியம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
- மண்டல கல்வி வாரிய அதிகாரி செண்பராஜன் கலந்துகொண்டு நல வாரியங்களின் பலன்கள் பற்றி எடுத்துக்கூறினார்.
- பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் சர் பிட்டி தியாகராயர் தொழிற்சங்கம் மற்றும் மத்திய அரசு தொழிலாளர் கல்வி வாரிய மண்டல அலுவலகம், கோவை மண்டலம் சார்பில் நலவாரியம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மண்டல கல்வி வாரிய அதிகாரி செண்பராஜன் கலந்துகொண்டு நல வாரியங்களை பற்றியும், அதனுடைய பலன்கள் பற்றியும் எடுத்துக்கூறினார். இதற்கான ஏற்பாடுகளை சர் பிட்டி தியாகராயர் தொழிற்சங்க செயலாளர் கே.ஜி நடராஜ் செய்திருந்தார். இதில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.