உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்

Published On 2023-06-24 07:02 GMT   |   Update On 2023-06-24 07:02 GMT
  • 2023ம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருது சுதந்திர தினத்தன்று நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் முதல்வர் வழங்கவுள்ளார்.
  • வருகிற 30ந் தேதிக்குள் http://awards.tn.gov.in என்ற ஆன்லைன் முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

திருப்பூர்:

கல்பனா சாவ்லா விருது பெற விளையாட்டுத்துறையில் சாதனை படைக்கும் பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து திருப்பூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜகோபால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:- விளையாட்டில் சாதனை புரிந்த விளையாட்டு வீராங்கனைகளுக்கு 2023ம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருது சுதந்திர தினத்தன்று நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் முதல்வர் வழங்கவுள்ளார். தமிழகத்தை சேர்ந்த விளையாட்டில் சாதனை புரிந்த பெண்கள் அதற்கான சான்றுகளுடன் வருகிற 30ந் தேதிக்குள் http://awards.tn.gov.in என்ற ஆன்லைன் முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடிதம் வாயிலாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் வருகிற 28ந்தேதிக்குள், உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், பெரியமேடு, சென்னை என்ற முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Tags:    

Similar News