உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

திருப்பூர் மாநகராட்சியில் நகர சுகாதார செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Published On 2023-08-28 10:26 IST   |   Update On 2023-08-28 10:26:00 IST
  • காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நேர்காணல் நடைபெற உள்ளது.
  • முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் மாநகர நல சங்கம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

14 நகர சுகாதார செவிலியர்கள் பணியிடத்துக்கு பி.எஸ்சி.நர்சிங், நர்சிங் மிட்வைப் பயிற்சி, டிப்ளமோ நர்சிங் அன்ட் மிட்வைப் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 2 ஆய்வக அலுவலர், 1 மருத்துவ பணியாளர் பணியிடமும் நிரப்பப்பட உள்ளது.

வருகிற 11-ந் தேதி திருப்பூர் மாநகராட்சி சுகாதார பிரிவில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நேர்காணல் நடைபெற உள்ளது. தகுதிவாய்ந்த நபர்கள் இந்த நேர்காணலில் தங்களது அசல் சான்றிதழ், ஆதார் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 0421 2240153 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நேர்காணலுக்கு வருபவர்களிடம் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கல்விச்சான்றிதழ், தமிழ்நாடு மருத்துவ குழும பதிவு சான்றிதழ், ஆதார் கார்டு நகல், ரேஷன் கார்டு நகல் சரிபார்க்கப்படும். முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News