உள்ளூர் செய்திகள்

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Published On 2023-07-19 12:19 IST   |   Update On 2023-07-19 12:19:00 IST
  • டி.டி.வி.தினகரன் தலைமையில் தமிழக அரசியல் வரலாறு எழுதப்பட வேண்டும்.
  • கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளரும்,மாநகராட்சி முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி தலைமை தாங்கினார்.

திருப்பூர்:

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருப்பூர் மாநகர் மாவட்டம் சார்பில் பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளரும், மாநகராட்சி முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி தலைமை தாங்கினார். அவைத்தலைவர் பாலுச்சாமி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், துணை பொதுச்செயலாளருமான சி.சண்முகவேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசும்போது " அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எந்த ஒரு நிலைப்பாட்டை எடுத்தாலும் உறுதியாக எடுத்து வருகிறார். தமிழக மக்களுக்கான பிரச்சினைகளில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி டி.டி.வி.தினகரன் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்" என்றார். மாநகர் மாவட்ட செயலாளர் விசாலாட்சி பேசும்போது, டி.டி.வி.தினகரன் தலைமையில் தமிழக அரசியல் வரலாறு எழுதப்பட வேண்டும். அதற்காக நாம் அயராது உழைக்க வேண்டும் என்றார்.

இந்தக் கூட்டத்தில் துணை செயலாளர் புல்லட்ரவி, பொருளாளர் முத்துக்குட்டி, இணைச் செயலாளர் வினுபிரியா, துணை செயலாளர் கீதா, பொதுக்குழு உறுப்பினர்கள் நாகேந்திரகுமார், சத்யா, பகுதி செயலாளர்கள் சுகம் வீர.கந்தசாமி, சுதாகர், சிவசக்தி, முருகன், ராஜாங்கம், பாலு, ஹைதர் அலி, முத்துராஜன், நாகேஷ், சதீஷ், ஆனந்த், இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் இறை வெங்கடேஷ், தொழிற்சங்க பேரவை செயலாளர் பாலகிருஷ்ணன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் கலியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News