உள்ளூர் செய்திகள்

கூட்டம் நடைபெற்ற காட்சி.

சென்னையில் 29-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் அனைவரும் சீருடையில் கலந்து கொள்ள வேண்டும். - தி.மு.க., வடக்கு மாவட்ட இளைஞரணி கூட்டத்தில் தீர்மானம்

Published On 2023-07-26 04:34 GMT   |   Update On 2023-07-26 04:34 GMT
  • ராஜாராவ் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் தலைமை தாங்கினார்.
  • 29-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் சீருடையுடன் கலந்துகொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர்:

தி.மு.க., திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் திருப்பூர் ராஜாராவ் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் தலைமை தாங்கினார். வடக்கு மாநகர அமைப்பாளர் முத்துக்குமார், தெற்கு மாநகர அமைப்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜ் ஆகியோர் முன்னிலை வகி்த்தனர். கூட்டத்தில் திருப்பூர் வடக்கு மாவட்டம் மற்றும் மாநகரத்துக்கு நிர்வாகிகளை நியமிக்க ஒப்புதல் வழங்கிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், நியமனம் செய்த தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வது,

வருகிற 29-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் சீருடையுடன் கலந்துகொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட துணை அமைப்பாளர்கள் ராஜசேகரன், பாலசுப்பிரமணியம், சசி என்கிற ஞானசிகாமணி, சசிக்குமார், லிங்கேஸ்வரன், ரவிச்சந்திரன், முகமது ஜூனைத், வடக்கு மாநகர துணை அமைப்பாளர்கள் சந்திரசேகர், பாண்டித்துரை, வஞ்சிமுத்து, பார்த்திபன், தியாகு, தெற்கு மாநகர துணை அமைப்பாளர்கள் விக்னேஷ், அரவிந்த், திருநாவுக்கரசு, சையது அபுதாஹிர், அசோக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News