உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

திருப்பூர் மாநகராட்சி முழுவதும் 75ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

Published On 2023-07-08 10:16 GMT   |   Update On 2023-07-08 10:16 GMT
  • திருப்பூர் நடராஜ் தியேட்டர் சாலை ஆலாங்காடு பிரிவு அருகில் 250 மரக்கன்றுகள் நடப்பட்டன.
  • செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர்.

திருப்பூர்

திருப்பூர் மாநகராட்சியை பசுமை மாநகராட்சியாக மாற்றுவதற்காக, மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக திருப்பூர் மாநகராட்சி மற்றும் வனத்துக்குள் திருப்பூர் அமைப்புடன் இணைந்து கடம்ப வனம் எனும் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சி முழுவதும் 75ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு அதனை பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக இன்று திருப்பூர் நடராஜ் தியேட்டர் சாலை ஆலாங்காடு பிரிவு அருகில் 250 மரக்கன்றுகள் நடப்பட்டன.இதனை செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பனவர், மண்டல தலைவர்கள் ,கவுன்சிலர்கள் ,மற்றும் வனத்துக்குள் திருப்பூர் அமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News