உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க., பொன்விழா மாநாடு ஆலோசனை கூட்டம்

Published On 2023-08-08 13:22 IST   |   Update On 2023-08-08 13:22:00 IST
  • அ.தி.மு.க., பொன்விழா மாநாடு வரும் 20 ந்தேதி மதுரையில் நடைபெற உள்ளது
  • மாநாட்டுக்கு செல்லும் மோட்டார் சைக்கிள், நான்கு சக்கர வாகனங்களுக்கான ஸ்டிக்கர் , சிறப்பு பாஸ்களையும் வழங்கினார்.

உடுமலை:

அ.தி.மு.க., பொன்விழா மாநாடு வரும் 20 ந்தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு முன்னாள் அமைச்சரும் உடுமலை எம்எல்ஏ.வுமான ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது அதிமுக., நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பாக நடத்தி கொடுக்க வேண்டும் என கூறினார்.

மேலும் மாநாட்டுக்கு செல்லும் மோட்டார் சைக்கிள், நான்கு சக்கர வாகனங்களுக்கான ஸ்டிக்கர் , சிறப்பு பாஸ்களையும் உடுமலை ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ., வழங்கினார்.

இதில் பல்லடம் முன்னாள் எம்எல்ஏ., கரைபுதூர் நடராஜன், உடுமலை நகர செயலாளர் ஹக்கீம், மாவட்டக் இணை செயலாளர் சாஸ்திர சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ் ,முருகேசன், பிரனேஸ், பொள்ளாச்சி ஒன்றிய கழக செயலாளர் இளஞ்செழியன், ஆவல் பட்டி நட்ராஜ், சோமசுந்தரம், உடுமலை, பொள்ளாச்சி, குடிமங்கலம், பல்லடம் நகர ஒன்றிய செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News