உள்ளூர் செய்திகள்

புனித வெள்ளியை முன்னிட்டு திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ., தூய பவுல் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.   

திருப்பூர் ஆலயங்களில் சிலுவைப்பாதை ஆராதனை

Published On 2023-04-07 10:19 GMT   |   Update On 2023-04-07 10:19 GMT
  • 40 நாட்கள் தவக்காலம் அனுசரிப்பர்.
  • கடந்த ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை பவனி மற்றும் திருப்பலியுடன் துவங்கியது.

திருப்பூர் :

ஏசு கிறிஸ்து, சிலுவையில் அறையுண்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்ற நம்பிக்கையை நினைவுபடுத்தும் வகையில் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பெருநாள் கொண்டாடு கின்றனர். இதையொட்டி 40 நாட்கள் தவக்காலம் அனுசரிப்பர்.கடந்த பிப்ரவரி 21-ந்தேதி சாம்பல் புதனுடன் தவக்காலம் துவங்கியது.தேவாலயங்களில் வெள்ளி தோறும் சிலுவைப்பாதை ஆராதனை நடத்தப்பட்டது.

பக்தர்களை ஆன்மிக பாதையில் வழிநடத்தும் வகையில் கத்தோலிக்க, சி.எஸ்.ஐ.., உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களி லும், சிறப்பு நற்செய்தி கூட்டங்கள் நடத்தப்பட்டன.தவக்காலத்தின் புனித வாரம் கடந்த ஞாயிற்றுக்கி ழமை குருத்தோலை பவனி மற்றும் திருப்பலியுடன் துவங்கியது.

நேற்று புனித வியாழன், அனுசரிக்கப்பட்டது. ஏசு கிறிஸ்து, சிலுவைப்பாடு களை அனுபவிக்க துவங்கும் முன், தம் சீடர்களின் கால்களை கழுவி அவர்களுடன் உணவு அருந்திய நிகழ்வு நினைவு கூறப்பட்டது. இன்று ஏசுவின் சிலுவைப்பா டுகளை நினைவு கூறும் சிலுவைப்பாதை ஆராதனை திருப்பூர் ஆலயங்களில் நடத்தப்பட்டது. வருகிற 9-ந்தேதி ஈஸ்டர் பெருநாள் கொண்டாடப்படுகிறது.

Tags:    

Similar News