உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசிய காட்சி.

எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அ.தி.மு.க.வினர் திரண்டு வர வேண்டும் - பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., அழைப்பு

Published On 2022-08-06 07:39 GMT   |   Update On 2022-08-06 07:39 GMT
  • எடப்பாடி பழனிசாமிக்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது.
  • 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரளாக வந்து வரவேற்பு அளிக்க வேண்டும்.

திருப்பூர் :

அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் திருப்பூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அவைத்தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், என்.எஸ்.என்.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசியதாவது:- இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது. வருகிற 8-ந் தேதி திருப்பூர் மாவட்டம் காங்கயத்துக்கு எடப்பாடி பழனிசாமி வருகிறார். அவருக்கு திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரளாக வந்து வரவேற்பு அளிக்க வேண்டும். பொதுச்செயலாளராக பொறுப்பேற்று முதன் முறையாக திருப்பூர் மாவட்டத்துக்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அம்மா பேரவை மாநில துணை செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன், மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், துணை செயலாளர் பூலுவப்பட்டி பாலு, பகுதி செயலாளர்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், பி.கே.எம்.முத்து, பாலசுப்பிரமணியம், காங்கயம் நகர செயலாளர் வெங்கு என்கிற மணிமாறன், சார்பு அணி செயலாளர்கள் கண்ணபிரான், சிட்டி பழனிசாமி, ஆண்டவர் பழனிசாமி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News