உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

உண்டு உறைவிடப்பள்ளியில் மாணவர் சேர்க்கை

Published On 2023-05-26 13:13 IST   |   Update On 2023-05-26 13:13:00 IST
  • லிங்கமாவூரில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான அரசு உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது.
  • தற்போது 20 மாணவர்கள் வரை பராமரிக்கப்படுகின்றனர்.

உடுமலை :

உடுமலை ஒன்றியம் ஜல்லிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட லிங்கமாவூரில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான அரசு உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தற்போது 20 மாணவர்கள் வரை பராமரிக்கப்படுகின்றனர். அருகிலுள்ள ஈசல்திட்டு, குருமலை சுற்றுப்பகுதி மலைப்பகுதிகளிலிருந்து வந்து தங்கி படிக்கின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு உணவு, கல்வி, தங்குமிடத்துடன் அவர்களின் தனித்திறன்களை ஊக்குவிப்பது, விளையாட்டுப்போட்டிகள் நடத்துவது, சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வு என அனைத்து வகையிலும் மேம்படுத்தும் பள்ளிகளில் இப்பள்ளியும் ஒன்றாக உள்ளது.நடப்பு கல்வியாண்டில் பள்ளி தலைமையாசிரியர் ஐயப்பன், மற்றும் ஆசிரியர்கள் மக்கள் நடமாட்டம் மிகுந்த பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் நோட்டீஸ் வினியோகித்து சேர்க்கைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள், உண்டு உறைவிடப்பள்ளிகளில் உள்ள வசதிகள், மாணவர்களுக்கான ஊக்கத்தொகை, உதவிதொகை உள்ளிட்ட அனைத்தையும் குறிப்பிட்டு, பஸ் நிறுத்தம் பகுதியில் நோட்டீஸ் ஒட்டி வருகின்றனர். மலைவாழ் கிராமங்களுக்கும் நேரடியாக சென்று அப்பகுதி பெற்றோருக்கும் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News