உள்ளூர் செய்திகள்

இரவோடு இரவாக குப்பைகளை அகற்றும் பணியை மேயர் தினேஷ் குமார் ஆய்வு செய்த காட்சி

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆயுத பூஜை , விஜயதசமியையொட்டி குவிந்த குப்பைகள் இரவோடு இரவாக அகற்றம்

Published On 2022-10-05 07:09 GMT   |   Update On 2022-10-05 07:09 GMT
  • திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு வாழை மரக்கன்றுகள், பூக்கள் , பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது .
  • விற்காததை ஆங்காங்கே வியாபாரிகள் விட்டுச்சென்றனர் இதனால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கி நின்றது .

திருப்பூர் :

தமிழகத்தில் ஆயுத பூஜை , விஜயதசமி ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகிறது. தொழில் நிறுவனங்கள் அதிகம் நிறைந்த திருப்பூர் மாவட்டத்தில் ஆயுத பூஜை விழா மிக விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதற்காக பின்னலாடை நிறுவனங்கள் முதல் வீடுகள் வரை சுத்தம் செய்து வாழை மரக்கன்றுகள் வாங்கி வீடுகளின் வாயில் மற்றும் நிறுவனங்களின் நுழைவாயில் கட்டி பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம் . இதற்காக திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு வாழை மரக்கன்றுகள், பூக்கள் , பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது . விற்பனை நிறைவடைந்ததை அடுத்த கொண்டு வந்திருந்த வாழை மரங்கள் விற்காததை ஆங்காங்கே வியாபாரிகள் விட்டுச் சென்றனர் . இதனால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கி நின்றது .

இதனை இரவோடு இரவாக அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சியை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர் . இந்த துப்புரவு பணியினை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

Tags:    

Similar News