உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

மகளிர் சுய உதவி குழுவில் கடன் பெற்று தலைமறைவாக இருந்த கணவன் -மனைவி கைது

Update: 2023-01-28 10:45 GMT
கடந்த 2018ம் ஆண்டு மகளிர் சுய உதவி குழு மூலம் சாந்தாமணியிடம் இருந்து ரூ.68 ஆயிரம் கடன் வாங்கினார்.

திருப்பூர்:

திருப்பூர் அடுத்த குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் சாந்தாமணி. அந்த பகுதியில் மகளிர் சுய உதவி குழு நடத்தி வந்தார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ் குமார் என்பவரின் மனைவி ரேகா(வயது 35) என்பவர் கடந்த 2018ம் ஆண்டு மகளிர் சுய உதவி குழு மூலம் சாந்தாமணியிடம் இருந்து ரூ.68 ஆயிரம் கடன் வாங்கினார்.

கடனை பெற்றுக் கொண்ட ரேவதி அதன் பிறகு அந்த பணத்தை திருப்பி செலுத்தவில்லை. சாந்தாமணி இதுகுறித்து பலமுறை கேட்டும் எந்த பயனும் இல்லை. இந்த நிலையில் ரேகா தனது கணவருடன் திடீரென தலைமறைவானார். இதனால் ஏமாறப்பட்டதை உணர்ந்த சாந்தாமணி இதுகுறித்து குன்னத்தூர் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் குன்னத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் பெற்றுக் கொண்டு தலை மறைவாக இருந்த கணவன் மனைவியை தேடி வந்தனர். அவர்கள் காங்கேயம் பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து குன்னத்தூர் போலீசார் இருவரையும் கைது செய்து குன்னத்தூர் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News