உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் முருகர், வள்ளி-தெய்வானை சுவாமிகள் சப்பரத்தில் வீதி உலா நடைபெற்ற காட்சி.

சோமவார சன்மார்க்க சங்கம் சார்பில் சிவன்மலையில் முருகருக்கு அபிஷேக ஆராதனை

Published On 2023-02-09 05:44 GMT   |   Update On 2023-02-09 05:44 GMT
  • 14-ந் தேதி வரை அபிஷேக ஆராதனை நடத்தி வருகின்றனர்.
  • முருகர், வள்ளி, தெய்வானை தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆரோதனைகள் நடந்தது.

காங்கயம் :

காங்கயம் அருேக உள்ள சிவன்மலை முருகன் கோவிலின் வருடாந்திர தைப்பூச திருவிழாவை முன்னிட்டு 3 நாட்கள் தேரோட்டம் நடந்தது. பின்னர் தேர் நிலை சேர்ந்ததும் கோவிலின் கட்டளைதாரர்கள் தேரோட்டத்திற்கு முன்பும் அதைத்தொடர்ந்தும் வருகிற 14-ந்தேதி வரை அபிஷேக ஆராதனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்றிரவு சிவன்மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் சன்னதியில் சிவன்மலை சோமவார சன் மார்க்க சங்கத்தின் சார்பாக முருகர், வள்ளி, தெய்வானை தெய்வங்களுக்கு பல்வகை சிறப்பு அலங்காரங்களை செய்து அபிஷேக ஆரோதனைகள் நடந்தது. பின்னர் தெய்வங்களை சப்பரத்தில் வைத்து சிவன்மலை ரதவீதிகளில் ஊர்வலமாக எடுத்து சென்று நஞ்சுண்டேஸ்வரர் சன்னதியில் வைத்து பய பக்தியுடன் வணங்கினர். நிகழ்ச்சியில் சோமவார சன் மார்க்க சங்கத்தினர், பக்தர்கள் உள்பட பலரும் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News