நிர்வாண கோலத்தில் பெண்களுக்கு ஆபாச சைகை காட்டிய வாலிபர்
- மாதப்பூா் பெட்ரோல் நிலையம் அருகே ஒதுக்குப்புறமான இடத்தில் முழு நிா்வாண கோலத்தில் இளைஞா் ஒருவா் நின்று கொண்டிருந்தாா்.
- . சம்பவ இடத்துக்கு அவா்கள் சென்று பாா்த்தபோது அந்த இளைஞா் அங்கிருந்து தப்பி சென்று விட்டாா்.
பல்லடம் :
பல்லடத்தை அடுத்த மாதப்பூா் பெட்ரோல் நிலையம் அருகே ஒதுக்குப்புறமான இடத்தில் முழு நிா்வாண கோலத்தில் இளைஞா் ஒருவா் நின்று கொண்டிருந்தாா். இதனால் அதிா்ச்சி அடைந்த அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் அவா் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று கருதினா். மேலும் இது குறித்து அந்த ஊரில் உள்ள இளைஞா்களிடம் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு அவா்கள் சென்று பாா்த்தபோது அந்த இளைஞா் அங்கிருந்து தப்பி சென்று விட்டாா்.
இந்த நிலையில் அதே இடத்தில் நேற்றும் அந்த இளைஞா் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு அந்த வழியே செல்லும் பெண்களுக்கு ஆபாச சைகைகளை காட்டியுள்ளாா். இதை கண்காணித்த அந்த ஊரைச் சோ்ந்த வாலிபர்கள் அவரை சுற்றி வளைத்துப் பிடித்து கொடுத்தனர். பல்லடம் போலீசில் அந்த நபரை ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில், அவா் சேலத்தை சோ்ந்த இளங்கோ என்பவரது மகன் மணிவேல் (28) என்பதும், தற்போது பொங்கலூா் சக்தி நகா் பகுதியில் கோழிப்பண்ணையில் வாகன ஓட்டுநராக வேலை பாா்த்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.