உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

தாசில்தார் அலுவலகங்களில் ஆதார் பதிவில் கைரேகை புதுப்பித்தல் சிறப்பு முகாம் நாளை நடக்கிறது

Published On 2022-07-08 05:09 GMT   |   Update On 2022-07-08 05:09 GMT
  • அவினாசி, தாராபுரம், காங்கயம், வெள்ளகோவில், மடத்துக்குளம், பல்லடம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது.
  • முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கைரேகை பதிவு ஆகாமல் ரேஷன் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் கைரேகை பயன்படுத்தி ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுகிறது. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கைரேகை பதிவு ஆகாமல் ரேஷன் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களின் நன்மைக்காக நாளை 9-நதேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆதார் பதிவில் கைரேகை புதுப்பித்தல் சிறப்பு முகாம் தாசில்தார் அலுவலகங்களில் நடக்கிறது.

அதன்படி அவினாசி தாலுகாவில் தாசில்தார் அலுவலகத்திலும், தாராபுரம் தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகத்திலும், காங்கயம் தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், வெள்ளகோவில் நகராட்சி அலுவலகம், மடத்துக்குளம் தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், பல்லடம் தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது.

திருப்பூர் வடக்கு தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், தொட்டிப்பாளையம் மண்டல அலுவலகம், திருப்பூர் தெற்கு தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், கலெக்டர் அலுவலகம், நல்லூர் மண்டல அலுவலகம், மாநகராட்சி மைய அலுவலகம், உடுமலை தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், உடுமலை நகராட்சி அலுவலகம், ஊத்துக்குளி தாலுகாவில் தாசில்தார் அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடக்கிறது.

இந்த முகாமில் பங்கேற்று ஆதார் கார்டில் கைரேகை பதிவை புதுப்பித்து, சிரமம் இல்லாமல் பொருட்களை வாங்கி பயன்பெறலாம் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News