உள்ளூர் செய்திகள்

கோப்புடம்.

அவிநாசி அருகே சத்துணவுக் கூடத்துக்குள் புகுந்த பாம்பு

Published On 2022-11-08 06:54 GMT   |   Update On 2022-11-08 06:54 GMT
  • பாம்பை சமூக ஆா்வலா் பிடித்து வனப் பகுதியில் விடுவித்தாா் .
  • 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

அவினாசி :

சேவூா் அருகே சாலைப்பா ளையம் அரசு நடுநிலைப் பள்ளி சத்துணவுக் கூடத்துக்குள் புகுந்த பாம்பை சமூக ஆா்வலா் பிடித்து வனப் பகுதியில் விடுவித்தாா். அவிநாசி வட்டம், சேவூா் அருகே சாலையப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்நிலையில், இங்குள்ள சத்துணவுக் கூடத்துக்குள் திங்கள்கிழமை மதியம் திடீரென 3 அடி நீளமுள்ள பாம்பு புகுந்தது.

இதைப் பாா்த்த சத்துணவுப் பணியாளா்கள், சமூக ஆா்வலரும், பாம்பு பிடிப்பதில் பழக்கப்ப ட்டவருமான விஜய்க்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த விஜய் பாதுகாப்பான முறையில் பாம்பை பிடித்து வனப் பகுதியில் விடுவித்தாா்.

Tags:    

Similar News