உள்ளூர் செய்திகள்
நிரம்பி இருக்கும் குளத்தை படத்தில் காணலாம்.
மழைநீரை சேமிப்பதற்காக மாணவர்கள் உருவாக்கிய குளம் நிரம்பியது
- மாணவர்கள் மழை நீரை சேமிப்பதற்காக கல்லூரி வளாகத்தில் குளம் ஒன்றை வெட்டினர்.
- இன்று காலை வரை பெய்த மழையால் குளம் நிரம்பி காணப்படுகிறது.
திருப்பூர் :
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவர்கள் மழை நீரை சேமிப்பதற்காக கல்லூரி வளாகத்தில் குளம் ஒன்றை வெட்டி அதற்கு என்.எஸ்.எஸ் குளம் என்று பெயரிடப்பட்டது. இந்தநிலையில் திருப்பூர் மாநகரில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பெய்த மழையால் குளம் நிரம்பி காணப்படுகிறது. இந்த மழை சீசனில் மூன்றாவது முறையாக குளம் நிரம்பியது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் மற்றும் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தெரிவித்தனர். அலகு -2 மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களும் ஆர்வத்தோடு குளம் நிரம்பி உள்ளதை செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.