உள்ளூர் செய்திகள்
குழியில் விழுந்த நாயை தீயணைப்புத்துறையினர் மீட்ட காட்சி.
பல்லடம் பஸ் நிலைய வளாக குழியில் விழுந்த நாய் உயிருடன் மீட்பு
- தோண்டப்பட்ட சுமார் 10 அடி ஆழமுள்ள குழியில் நேற்று நாய் ஒன்று தவறி விழுந்தது.
- லேசான காயம் அடைந்த நாயை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
பல்லடம்:
பல்லடம் பஸ் நிலைய வளாகத்திற்குள் இரு சக்கர வாகன நிறுத்தம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக தோண்டப்பட்ட சுமார் 10 அடி ஆழமுள்ள குழியில் நேற்று நாய் ஒன்று தவறி விழுந்தது. குழியில் விழுந்த நாய் வெளியேற முடியாமல் தொடர்ந்து கத்திக்கொண்டே இருந்துள்ளது.
நாயின் சத்தம் கேட்டு பஸ் நிலைய நேரக்காப்பாளர் ராஜா அங்கு வந்து குழியில் விழுந்த நாயை பார்த்து விட்டு பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடம் வந்த தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி நாயை பத்திரமாக உயிருடன் மீட்டனர். குழியில் விழுந்ததால் லேசான காயம் அடைந்த நாயை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.