உள்ளூர் செய்திகள்
கைதான தம்புராஜ்.
உடுமலையில் பள்ளி மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபர் கைது
- சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்தி சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
- போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
உடுமலை :
உடுமலை அருகே உள்ள மானுப்பட்டி இந்திராநகரை சேர்ந்தவர் தம்புராஜ் (வயது 22) .கூலி தொழி லாளியான இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வந்த 16 வயது மாணவியை கடத்தி சென்றுள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். மாணவி மாயமானதாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் தம்புராஜ் சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்தி சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இது குறித்து உடுமலை அனைத்து மகளிர் போலீ சார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தம்புராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.