உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பல்லடம் நகராட்சியில் 90 சதவீதம் வரி வசூல் - ஆணையாளர் தகவல்

Published On 2023-04-01 05:20 GMT   |   Update On 2023-04-01 05:20 GMT
  • பல்லடம் நகராட்சி நிர்வாகத்திற்கு சுமார் ரூ.10 கோடி வருவாய் வருகிறது.
  • 18 வார்டுகளில் வணிக கட்டடங்கள் -1,263, தொழிற்கூடங்கள் -546, குடியிருப்புகள்-15,664, கல்வி நிறுவனங்கள் 25 ஆகியவை உள்ளன.

பல்லடம் :

பல்லடம் நகராட்சி பகுதியில் 18 வார்டுகளில் வணிக கட்டடங்கள் - 1,263, தொழிற்கூடங்கள் -546, குடியிருப்புகள்-15,664, கல்வி நிறுவனங்கள் 25 ஆகியவை உள்ளன. இவற்றின் மூலம் பல்லடம் நகராட்சி நிர்வாகத்திற்கு சுமார் ரூ.10 கோடி வருவாய் வருகிறது. இந்த நிலையில்,நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் 31-ந் தேதியுடன் நிதியாண்டு நிறைவடைவதையொட்டி 3 மாதங்களுக்கு முன்பே நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரிவசூல் நடவடிக்கையை தீவிரப்படுத்துவது வழக்கம்.

அதன்படி இதுவரை 90 சதவீதம் வரை வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி ஆணையாளர் விநாயகம் கூறியதாவது:- பல்லடம் நகராட்சி பகுதியில் 18 வார்டுகளில் வணிக கட்டடங்கள் - 1,263, தொழிற்கூடங்கள் -546, குடியிருப்புகள்-15,664, கல்வி நிறுவனங்கள் 25 ஆகியவை உள்ளன. இந்த நிலையில் பல்லடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் 31-ந்தேதியுடன் நிதியாண்டு நிறைவடைவதையொட்டி 3 மாதங்களுக்கு முன்பே நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரிவசூல் நடவடிக்கையை தீவிரப்படுத்துவது வழக்கம்.

இதன்படி நகராட்சி அலுவலக வரி வசூல் மையங்களில் பொதுமக்கள் தங்களது சொத்துவரி, குடிநீர் கட்டணம், உள்ளிட்ட வரிகளை செலுத்தி வருகின்றனர். இதுவரை 90 சதவீதம் வரை வரி வசூல் செய்யப்பட்டுள்ள நிலையில் உரிய நேரத்தில் வரியை செலுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

தொடர்ந்து நகராட்சி தலைவரின் அறிவுறுத்தலின் படி பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான வாடகை பாக்கி செலுத்தாத கடைகளை சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.மேலும் வரி இனங்களை செலுத்தாத பொதுமக்கள் உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ள வரி வசூல் மையத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். மேலும் தங்களது இல்லத்தில் இருந்தே கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து TN URBAN ESEVAI என்ற செயலியில் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்த தங்களது அலைபேசி எண்ணின் மூலமாக செலுத்தலாம். அதற்குரிய ரசீது உடனே வரும். அதனை பதிவு இறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News