உள்ளூர் செய்திகள்

அதிகாரிகள் சோதனை நடத்திய காட்சி. 

திருப்பூர் உணவகங்களில் கெட்டுப்போன 42 கிலோ சிக்கன், 11 கிலோ புரோட்டா மாவு பறிமுதல்

Published On 2023-09-21 16:30 IST   |   Update On 2023-09-21 17:25:00 IST
  • உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
  • 13 உணவகங்களுக்கு 17 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்:

நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உணவகங்களில் சோதனை நடத்த சுகாதாரத் துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட கொடியம்பாளையம் நால்ரோடு பகுதியில் உள்ள உணவகங்களில் நடத்திய ஆய்வில் கெட்டுப்போன சிக்கன் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததாக 42 கிலோ சிக்கன் , 11 கிலோ பழைய புரோட்டா மாவு , கெட்டுப்போன மசாலாக்கள் 3 கிலோ , 2 கிலோ மைனஸ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்து வந்த 13 உணவகங்களுக்கு 17 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News