உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பா.ஜனதா கட்சியினர் 23 பேர் கைது
- போராட்டம் தாராபுரம் அண்ணா சிலை அருகே நேற்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
- போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் கைது செய்தார்.
தாராபுரம்:
பட்டியல் இன மக்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை தமிழக அரசு திருப்பி அனுப்பியதாக கூறி பா.ஜனதா திருப்பூர் தெற்கு மாவட்ட பட்டியல் அணி சார்பில் பிச்சை அளிக்கும் போராட்டம் தாராபுரம் அண்ணா சிலை அருகே நேற்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க. பட்டியல் அணி மாவட்ட தலைவர் நத்தக்காடையூர் சாமிநாதன் தலைமையில் 23 பேர் வந்தனர். அவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் கைது செய்தார்.