உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

பல்லடத்தில் புகையிலை பொருட்களை கடத்திய 2 பேர் கைது

Published On 2023-07-19 12:38 IST   |   Update On 2023-07-19 12:38:00 IST
  • அரசால் தடை செய்யப்பட்ட 89 கிலோ புகையிலை பொருட்களை கடத்தியது தெரியவந்தது.
  • கடத்துவதற்கு பயன்படுத்திய மோட்டர் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

பல்லடம்:

பல்லடம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து போலீசார் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் பல்லடம்- பெத்தாம்பாளையம் ரோட்டில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனை யில் ஈடுபட்டிரு ந்தனர். அப்போது அந்த வழியே மோட்டர் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 மூட்டைகளுடன் வந்த வாலிபர்கள் 2 பேரை பிடித்து விசாரித்த போது, அவர்கள் புகையிலை பொருட்கள் கடத்துவது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணையை மேற்கொண்டனர். அவர்கள் பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த காதர் பாட்சா மகன் அக்பர் சேட்(37) பல்லடம் மங்கலம் ரோடு இளங்கோ விதியைச் சேர்ந்த சதாம் புதின் மகன் அசாருதீன்(22) என்பதும் அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட 89 கிலோ புகையிலை பொருட்களை கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து 89 கிலோ புகையிலை பொருட்களையும், அதனைக் கடத்துவதற்கு பயன்படுத்திய மோட்டர் சைக்கிளையும் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News