உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

சுற்றுச்சுவர் தகராறில் 2 பேர் கைது

Published On 2023-07-01 16:14 IST   |   Update On 2023-07-01 16:14:00 IST
  • வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
  • ஒருதலைப் பட்சமாக நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று முருகேசன் தரப்பினர் தெரிவித்தனர்.

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னிய கவுண்டம்பாளையத்தில் சாவித்திரி மற்றும் முருகேசன் ஆகியோர் வீடுகள் அருகருகே உள்ளது. இவர்களுக்கு இடையே சுற்றுச்சுவர் வைத்ததில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 26 ந் தேதி இது குறித்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த சாவித்திரி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முருகேசன் , சூரியமூர்த்தி ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே போலீசார் இடப் பிரச்சினையில் சரிவர விசாரணை செய்யாமல் ஒருதலைப் பட்சமாக நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று முருகேசன் தரப்பினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News