கைது செய்யப்பட்டவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட காரையும் படத்தில் காணலாம்.
திருப்பூரில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது
- 3 கிலோ கஞ்சா, கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- மதுரையை சேர்ந்த கருப்பசாமி (28), நாகேந்திரன் (25) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் போயம்பா ளையம், குருவாயூரப்பன் நகரில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக, அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமாவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்ததில், கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அங்கிருந்த, 3 கிலோ கஞ்சா, கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த மதுரையை சேர்ந்த கருப்பசாமி (28), நாகேந்திரன் (25) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் மதுரையிலிரு ந்து கார் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து குருவாயூரப்ப ன் நகரில் பதிக்க வைத்து திருப்பூரின் பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்ததும் தெரியவந்தது.