உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

மருத்துவ படிப்பில் சேர திருப்பூர் அரசு பள்ளி மாணவர்கள் 128 பேருக்கு வாய்ப்பு

Published On 2022-09-12 12:26 GMT   |   Update On 2022-09-12 12:26 GMT
  • தேர்வு முடிவுகள் கடந்த 7ந் தேதி இரவு இணையத்தில் வெளியானது.
  • அரசு பள்ளிகள் அளவில் அய்யன்காளிபாளையம் வைஷ்ணவி 320 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார்.

திருப்பூர் :

நடப்பாண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த ஜூலை 17ந்தேதி நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 418 பேர் தேர்வு எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த 7ந் தேதி இரவு இணையத்தில் வெளியானது. திருப்பூர் மாவட்ட அரசு பள்ளிகள் அளவில் அய்யன்காளிபாளையம் வைஷ்ணவி 320 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி நித்யஸ்ரீ 289 மதிப்பெண்ணுடன் இரண்டாமிடம், ஜெய்வாபாய் பள்ளி மாணவி காயத்ரி 287 மதிப்பெண்ணுடன் மூன்றாம் இடம், கே.எஸ்.சி., ஆண்கள் பள்ளி மாணவன் அரவிந்த் கார்த்திக் 285 மதிப்பெண்ணுடன் நான்காம் இடம், ஜெய்வாபாய் பள்ளி மாணவி ஸ்வேதா 282 மதிப்பெண் எடுத்து5-ம் இடம் பிடித்துள்ளனர்.இவர்கள் அனைவரும் பிளஸ் 2 முடித்து முதல் முறையாக தேர்வை எதிர்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கணக்கம்பாளையம் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, அழகு என்பவர் இரண்டாம் முறையாக தேர்வு எழுதி 372 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார். இவர் கடந்தாண்டு 190 மதிப்பெண் எடுத்திருந்தார்.

இது குறித்து நீட் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறுகையில், திருப்பூரில் 93 மதிப்பெண்ணுக்கு மேல் 128 பேர் எடுத்து தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த முறை ஊரடங்கு காரணமாக, படிக்க அவகாசம் கிடைத்தது. 400 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தனர்.இந்த முறை 320 மதிப்பெண் மட்டுமே எடுக்க முடிந்தது. தமிழக அரசின் 7.5 இட ஒதுக்கீட்டின் கீழ் சேர 128 பேர் தகுதி பெற்றுள்ளனர். இருப்பினும் கட்ஆப் அடிப்படையில் சீட் கிடைக்க வாய்ப்புண்டு என்றார்.

Tags:    

Similar News