போட்டியில் திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 87 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பள்ளி மாணவர்களுக்கு திருப்பாவை, திருவெம்பாவை பாடல் போட்டி
- போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் பரிசு வழங்கினார்.
- பரிசளிப்பு விழாவுக்கு அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தலைமை தாங்கினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 42-வது பாவை விழா நடந்தது.
பாடல் போட்டி
இதையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருப்பாவை, திருவெம் பாவை பாடல் போட்டி நடந்தது. இதில் திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஸ்ரீ சரவணய்யர் நடுநிலைப்பள்ளி, இந்து தொடக்கப்பள்ளி, மேலத்திருச்செந்தூரர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகடாமி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, காஞ்சி சங்கரா வித்யாஷ்ரம், குலசேகரபட்டிணம் வள்ளி யம்மையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பண்டார சிவன் செந்தில் ஆறுமுகம் நினைவு நடுநிலை பள்ளி ஆகிய 6 பள்ளி மாணவ, மாணவிகள் 87 பேர் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்றவர்களுக் கான பரிசளிப்பு விழா திருச்செந்தூர் ஆனந்தவல்லி சமேத சிவக் கொழுந்தீஸ்வரர் ஆலயத்தில் நடந்தது. விழாவுக்கு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தலைமை தாங்கினார்.
பதக்கம்-பரிசுகள்
இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் ராம்தாஸ், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில் ஓதுவார் கோமதிசங்கர் இறைவணக்கம் பாடி, வரவேற்று பேசினார். 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை, 4-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை, 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தனித்தனியாக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் முதல் 3 பேருக்கும் மற்றும் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் பரிசுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் திருப்பாவை குறித்து முத்தரசு, திருப்பள்ளி எழுச்சி குறித்து இல்லங்குடி, திருவெம்பாவை குறித்து வேலாண்டி ஓதுவார் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில், கோவில் அலுவலர்கள் ராஜ்மோகன், ரமேஷ், நெல்லையப்பன், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், கோவில் புலவர் மகாமுனி நன்றி கூறினார்.