உள்ளூர் செய்திகள்

கால்நடை மருத்துவ முகாம்

Published On 2023-01-13 14:01 IST   |   Update On 2023-01-13 14:01:00 IST
  • மாடு மற்றும் கன்றுகள் பேரணியாக கொண்டு செல்லப்பட்டது
  • 125 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அடுத்த இருணாப்பட்டு கிராமத்தில் காலநடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

முகாமில் மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு சினை ஊசி இலவசமாக போடுதல், குடற்புழுநீக்கம், கன்றுகள், கால்நடைகளுக்கு தேவையான மருந்து மாத்திரைகள், மாடு மற்றும் கன்றுகளுக்கு பேரனி நடத்தி, கால்நடை பராமரிப்புத்துறை பரிசுகளை வழங்கினார்கள்.

முகாமில் கால்நடைகளுக்கு சினை ஊசி போடுதல் உள்ளிட்ட பயிற்சியில் ஊரக வேளாண்மை அதியமான் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் ஹரிபிரசாத், முத்தமிழ்செல்வன், பரீஹரி உள்ளிட்ட 10 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மிட்டூர் கால்நடை உதவி மருத்துவர் சத்யா மாணவர்களுக்கு கால்நடை பராமரிப்பு தொடர்பான பயிற்சி மற்றும் விளக்கங்களை அளித்தார். முகாமில் 125 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News