உள்ளூர் செய்திகள்
- 3 நாட்கள் நடந்தது
- பெண் விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது
திருப்பத்தூர்:
கிருஷ்ணகிரி வேளாண் அறிவியல் மையம் மற்றும் நபார்டு வங்கி சார்பில் பெண் விவசாயிகளுக்கு திருப்பத்தூரில் நவீன முறையில் கறவை மாடு வளர்ப்பு குறித்து சிறப்பு பயிற்சி முகாம் கடந்த 3 நாட்கள் நடந்தது.
பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிக்கு நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் பிரவீன்பாபு தலைமை தாங்கினார்.
திருப்பத்தூர் பிரீடம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி எழிலரசி வரவேற்றார்.
இதில் பயிற்சி பெற்ற பெண் விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.