உள்ளூர் செய்திகள்

அங்கன்வாடி பணியாளர்களுக்கான பயிற்சி முகாம்

Published On 2022-12-10 15:03 IST   |   Update On 2022-12-10 15:03:00 IST
  • குழந்தைகள் பராமரிப்பு பற்றிய வழிமுறைகளை விளக்கினர்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் ஆலங்காயம் வட்டாரத்திற்கு உட்பட்ட புலவர்பள்ளி அங்கன்வாடி மையத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

செந்தாமரை தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி கலந்து கொண்டு 2 வயது வரையிலான குழந்தைகளுக்கான வளர்ச்சி மற்றும் பராமரிப்பு பற்றிய வழிமுறைகளை பணியாளர்களுக்கு மிக எளிய முறையில் எடுத்து கூறினார்.

இந்த முகாமில் அங்கன்வாடி பணியாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News