உள்ளூர் செய்திகள்

வகுப்பறையில் சிமெண்டு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு

Published On 2023-09-14 15:31 IST   |   Update On 2023-09-14 15:31:00 IST
  • தரமற்ற முறையில் பராமரிப்பு பணி
  • பொதுமக்கள் குற்றம் சாட்டு

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மண்டலவாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

இந்த பள்ளியில் உள்ள வகுப்பறை கட்டிடம் கடந்த ஆண்டு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

பராமரிப்பு பணி முடிந்த பிறகு பயன்பாட்டுக்கு வராமல் திறப்பு விழாவுக்கு காத்திருந்தது.

சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்ட வகுப்பறை கட்டிடத்தில் இன்று காலை திடீரென சீலிங் சிமெண்ட் பூச்சுகள் திடீரென பெயர்ந்து விழுந்தது. வகுப்பறை பயன்பாட்டுக்கு வராத தால், அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.

தரமற்ற முறையில் பராமரிப்பு பணி நடந்ததாகவும், அதனை தெரிந்தும் கூட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டு கின்றனர்.

வகுப்பறை கட்டிடத்தின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News