உள்ளூர் செய்திகள்

1000 ஆண் குழந்தைகளுக்கு 944 பெண் குழந்தைகள் மட்டுமே உள்ளனர்

Published On 2023-03-07 09:43 GMT   |   Update On 2023-03-07 09:43 GMT
  • கருகலைப்பு செய்யக் கூடாது என எச்சரிக்கை
  • அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் அதிகாரி ஆய்வு

ஜோலார்பேட்டை:

ஏலகிரி மலை அத்தனாவூர் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மாரிமுத்து ஆய்வு மேற்கொண்டார். அவர் கூறியதாவது:-

பாலினம் ஆணா பெண்ணா என ஸ்கேன் செய்வது நமது மாவட்டத்தில் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும் எங்களுக்கு புகார் வரும் போது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து நமது மாவட்டத்தில் உள்ள மையங்களுக்கு வருகின்ற தாய்மார்களுக்கு நமது மருத்துவர்கள் கண்டிப்பாக ஸ்கேன் செய்யக்கூடாது.

நமது மாவட்டத்தில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 944 பெண் குழந்தைகளே இருப்பதால் இனி வரும் காலங்களில் கருகலைப்பு போன்ற நிகழ்வு நடைபெற்றால் பெரும் சட்ட சிக்கல்கள் ஏற்படும்.

அனைத்து மருத்துவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் . அவர்கள் பராமரிக்கின்ற அனைத்து பதிவேடுகளையும் சரியான உரிய முறையில் பதிவு செய்யப்பட வேண்டும்.

தாய்மார்களுடைய பதிவேடுகளில் அவருடைய அனைத்து தகவல்களும் தவறாமல் இடம் பெற வேண்டும் அதில் பெயர் மட்டும் பதிவு செய்ய கூடாது.

இனிவரும் காலங்களில் விதி விதிமீறல் சற்றும் இருக்கக் கூடாது ஆய்வு மேற்கொண்டு மீறலில் செயல்படும் ஸ்கேன் மையங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News