உள்ளூர் செய்திகள்

டிரைவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்ட பஸ்.

மலைப்பாதையில் வந்தபோது அரசு பஸ்சில் டிரைவருக்கு திடீர் மயக்கம்

Published On 2023-05-24 09:39 GMT   |   Update On 2023-05-24 09:39 GMT
  • பஸ்சை நிறுத்தியதால் பயணிகள் நிம்மதி
  • பொதுமக்கள் பாராட்டு

ஜோலார்பேட்டை:

ஏலகிரி மலை நிலாவூர் பகுதியில் இருந்து திருப்பத்தூருக்கு அரசு பஸ் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. பஸ்சை மடவாளம் பகுதியை சேர்ந்த டிரைவர் அன்பு (வயது 45) ஓட்டி வந்தார்.

மங்களம் கூட் ரோடு அருகே வந்தபோது டிரைவ ருக்கு திடீரென தலை சுற்றல் ஏற்பட்டது.

சமாளித்தவாறே ஒரு வழியாக ஏலகிரிமலை ஆரம்ப சுகாதார நிலையம் வந்ததும் பஸ்சை நிறுத்தி னார். அப்போது அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனே அவரை தண்ணீர் தெளித்து கண்டக்டர் எழுப்பி ஆரம்ப சுகாதார நிலையத் துக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.

டாக்டர் சுமிதா அவரை பரிசோதனை செய்ததில் ரத்த கொதிப்பு அதிகமாக இருந் தது. மேலும் சர்க்கரை வியாதி இருந்தது தெரியவந்தது. இத னால் தான் டிரைவருக்கு தலை சுற்றல் மற்றும் மயக்கம் ஏற்பட்டது என தெரிவித்தார்.

இதனையடுத்து சிகிச்சை அளித்து ஓய்வு எடுக்க கூறி னார். இது சம்பந்தமாக திருப்பத் தூர் பகுதியில் உள்ள போக்குவரத்து கழக பணிமனைக்கு அவர் தகவல் தெரிவித்தார்.

மாற்று டிரைவர் இல்லாத தால் சற்று நேரம் ஓய்வு எடுத்து விட்டு பின்னர் நீங் களே பஸ்சை ஓட்டி வாருங் கள் என டிரைவர் அன்புவி டம் கூறிவிட்டனர்.

சற்று நேர ஓய்வுக்கு பின் பஸ்சை டிரைவர் அங்கிருந்து பயணிகளுடன் திருப்பத்தூருக்கு ஒட்டி வந்தார். தாமதம் காரணமாக பயணிகள் அவதி அடைந்தனர் எனினும் சற்று தொலைவு கழித்து ஆபத்தான கொண்டை ஊசி விளைவு பகுதியில் வரும்போது மயக்கம் ஏற்பட்டு இருந்தால் விபரீதம் ஏற்பட்டிருக்கும் சாமார்த்தியமாக செயல்பட்டு பஸ்சை ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நிறுத்தியதால் விபரீதம் தவிர்க்கப் பட்டது.

இதனால் பயணிகள் தாமதம் ஆனாலும் டிரைவரின் சாமார்த்தி யத்தை பாராட்டி நன்றி தெரிவித்து நிம்மதி அடைந்தனர்.

Tags:    

Similar News