உள்ளூர் செய்திகள்

புதுப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி

புதுப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு

Published On 2023-07-28 14:42 IST   |   Update On 2023-07-28 14:42:00 IST
  • பண்ணை குட்டைகள் அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்
  • உடல் பரிசோதனை செய்து கொண்டார்

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள அக்ராகரம் ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்பங்களை பதிவேற்றும் முகாமினை மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கரபாண்டியன், பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் அம்மனாங்கோயில் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து காட்டூர் பனம்தோப்பு பகுதியில் குறுங்காடுகள் அமைக்கும் பணியை பார்வையிட்டு மரக்கன்றுகள் நட்டு வைத்தார் புதுப்பேட்டை பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு திட்டத்தை முன்னிட்டு அப்துல் கலாம் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

புதுப்பேட்டை அரசு சமூதாய சுகாதார மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து உடல் பரிசோதனை செய்து கொண்டார் அதன் பிறகு ரத்த தானம் முகாமில் மாவட்ட கலெக்டர் பங்கேற்று ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கமும் வழங்கினார் இந்த ஆய்வின் போது உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) விஜயகுமாரி, ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் சத்யா சதிஷ்குமார், நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், சுகாதார துறை துணை இயக்குநர் செந்தில், ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் மீனாட்சி, டாக்டர் சுமன், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே.சதிஷ்குமார், மாவட்ட ரத்த வங்கி அலுவலர் குமரவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News