உள்ளூர் செய்திகள்

சாமுண்டீஸ்வரி கோவில் திருவிழா பாதுகாப்பு குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

Published On 2023-05-04 14:41 IST   |   Update On 2023-05-04 14:41:00 IST
  • நாளை சித்ரா பவுர்ணமி உற்சவப் பெருவிழா நடைபெற உள்ளது
  • பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து சோதனை

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள சரஸ்வதி ஆற்றங்கரையில் ஸ்ரீ சக்தி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை சித்ரா பவுர்ணமி உற்சவப் பெருவிழா நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் நேற்று மாலை கோவிலில் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரிய குமார், வாணியம்பாடி போலீசார் ஆகியோர் இருந்தனர்.

Tags:    

Similar News